02 December 2010

புள்ளிகளை கோர்க்கும் காலம்


கனவு
கலைத்துச்செல்பவனின்
சர்ப்பவாசம்
சுவாசம் முழுக்க
புணர்வின்
துகள்

தரையதிர
புணர்ந்தபின்
பிளக்கிறது நிலம்
அசைவற்ற
மரம்
இரண்டு இலைகளை
பிரசவிக்கிறது

மணிச்சத்தங்கள் இல்லா
கானக
ராத்திரி
சிதறிக்கிடக்கின்றன
தரையெங்கும்
நட்சத்திரங்கள்

கனவு
கலைத்துசெல்பவளின்
நிறம்
குதிரை
வானம்
ஒன்றும்
இல்லை